5ஜி’ இன்­டர்நெட் சேவையில் ஈடு­பட பி.எஸ்.என்.எல்., – நோக்­கியா ஒப்­பந்தம் !!

தொலை தொடர்பு துறையில் உள்ள, பி.எஸ்.என்.எல்., நிறு­வனம், அடுத்த தலை­மு­றைக்­கான, ‘5ஜி’ இன்­டர்நெட் சேவையில் ஈடு­பட, நோக்­கியா நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் செய்ய உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்­சவா கூறி­ய­தா­வது: எதிர்­கா­லத்தில், ‘4ஜி’க்கு பின், ‘5ஜி’ தொழில்­நுட்பம் சார்ந்த, இன்­டர்நெட்
பயன்­பாடு அதி­க­ரிக்கும். எனவே, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, அதி­ந­வீன இன்­டர்நெட் சேவையை வழங்க, நோக்­கியா நிறு­வ­னத்­துடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் செய்ய திட்­ட­மிட்டு உள்ளோம். இந்த ஒப்­பந்தம், இன்று கையெ­ழுத்­தாக உள்­ளது. இதன் மூலம், அதி­வேக தகவல் பரி­மாற்­றங்கள் உள்­ளிட்ட வச­தி­களை வாடிக்­கை­யா­ளர்கள் பெற முடியும்.‘ஸ்மார்ட் சிட்டி’ நக­ரங்­க­ளுக்கு தேவை­யான, ஐ.ஓ.டி., எனப்­படும், சாத­னங்­க­ளுக்கு இடை­யி­லான இணைய பயன்­பாடு சார்ந்த சேவை­க­ளுக்கும், இந்த ஒப்­பந்தம் துணை புரியும். இவ்­வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...