லூதியானாவில் தந்தை,மகன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்போர்க்கு சன்மானமாக 50 லட்சமும்,காவல் துறையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையும் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செங்கல்சூளையில் மேலாளராக பணியாற்றி வந்த சத்பால் (65) என்பவரும், அவரது மகன் ரமேஷ் குமார் (35) என்பவரும் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி லூதியானாவுக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள ஜகேரா என்னும் கிராமத்தில் மோட்டார் வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளின் உருவங்கள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால் அவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் முகத்தை அடையாளம் காண முடியவில்லை.
இது குறித்து லூதியானா சரக காவல்துறை துணைத் தலைவர் எஸ்.கே. காலியா கூறுகையில், ”சிசிடிவி கேமராக்களில் குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காண முடியவில்லை. எனவே, இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்போர்க்கு சன்மானமாக 50 லட்சமும் ,காவல்துறையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்போர் குறித்து எந்தவித தகவலும் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படமாட்டாது” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொருளாதார நிபுணர் சகாதாரா சிங் ஜோஹால் கூறுகையில்,” இதுபோன்ற பரிசு அறிவிப்பை தற்போதுதான் கேட்டுள்ளேன். இது போலீஸாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்போர்க்கு காவல்துறையில் வேலை கொடுப்பது என்பதை நியாயப்படுத்த முடியாது. போலீஸார் மற்ற வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதுபோல்,இந்த வழக்கிலும் அவர்களே குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட வழக்கில்மட்டும் மற்றவர்களிடம் இருந்து குற்றவாளிகள் குறித்து தகவல் பெறுவது என்பது நியாயமற்றது என பொருளாதார நிபுணர் மான்சிங் டூர் தெரிவித்துள்ளார்.