ஒரு கோடி குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது!

தமிழகம் முழுவதும் கடந்த 27 நாட்களில் 10 மாத குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர்கள் வரை சுமார் ஒரு கோடி பேருக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.



நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில், கடந்த பிப்ரவரியில் 15 வயதுள்ள 1.70 கோடி குழந்தைகளுக்கு, ரூபெல்லா, தட்டம்மை நோய்க்கு ஒரே தடுப்பூசி போடும் திட்டம் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையின்படி திட்டமிடப்பட்டது. புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்பட்ட 1,000 ரூபாய் மதிப்புள்ள இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இதற்கான முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்த தவறான செய்திகள் வெளியாகி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், தடுப்பூசி போட்டதால் மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இந்நிலையில், மாணவர்கள் உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் தவறான வதந்திகள் பரவின. இதனால்,பெற்றோர்கள் தடுப்பூசியை போடாலாமா ,வேண்டாமா என்ற குழப்பத்தில் அதை புறக்கணித்து வந்தனர். அதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட முடியவில்லை. அதனால், தடுப்பூசி போடுவதற்கான நாள் மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இது குறித்து மக்களிடையே தெளிவு ஏற்படுத்துவதற்கு தொலைக்காட்சி,வானொலி, திரையரங்கம்,விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறுகையில், ”தடுப்பூசி குறித்து வெளியாகும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 1 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 76 லட்சம் பேருக்கும் வரும் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட திட்டமிடபட்டுள்ளது. இந்த முகாம் முடிந்த பிறகு, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு 9 மாதம் முதல் 12 மாதத்துக்குள் முதல் தவணையும், 16 மாதம் முதல் 24 மாதத்தில் இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.

பொதுவாக தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும். ஆனால் இந்தாண்டு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...