தேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக ஊடகங்களையடுத்து, ஜோதிடர்களும் கணிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7
கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்திதாள், தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்போ, ஆய்வோ நடத்தக் கூடாது என்று மத்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. அதையடுத்து, முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்போதே, தொலைக்காட்சிகளில் முடிவுகள் குறித்து, ஜோதிடர்களை வைத்து கணிப்புகளை வெளியிப்பட்டன. இது குறித்து, தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, தேர்தல் முடிவு குறித்த புகார்களை விசாரித்த தேர்தல் கமிஷன், ஜோதிடர்கள் தேர்தல் முன் முடிவுகளை கணிப்பதற்கு தடை விதித்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தலின்போது, கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு புரம்பானது. அப்படி வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.