தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற தமிழகத்திற்கு அவகாசம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
'சாலை விபத்துகள் ஏற்படுவதை குறைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீ., தொலைவுக்கு மதுக்கடைகள் இருக்கக் கூடாது. ஏற்கனவே
அளித்துள்ள லைசென்ஸ்களை, 2017 மார்ச், 31க்கு பின் புதுப்பிக்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட், 2016 டிசம்பரில் தீர்ப்பு அளித்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களும், மதுக்கடை உரிமையாளர்களும் மனு தாக்கல் செய்தனர். 'நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதற்கான காலக்கெடுவை, இந்தாண்டு, நவ., 28 வரை நீட்டிக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில், மார்ச், 23ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மறுப்பு:
இந்த மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மதுக்கடைகளை அகற்ற அவகாசம் அளிக்க முடியாது என கோர்ட் கூறி விட்டது. தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்ற இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது. மற்ற மாநிலங்களில் செப்.,30ம் தேதியுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது.
தளர்வு:
இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீ தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்ற உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை 20 ஆயிரத்திற்கும் கீழ் வசிக்கும் பகுதிகளில் மட்டும் இந்த தொலைவு 220 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானம் விற்கக்கூடாது. பார்வைக்கு புலப்படும் வகையில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது. மக்கள் நலனுக்காக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கோர்ட் கூறியுள்ளது.