அரசு வழக்குரைஞர்கள் நியமனம் என்பது அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது. அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.வசந்தகுமார், ஜி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்குரைஞர் முதல் கீழ்
நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் அரசு வழக்குரைஞர்கள் வரை அனைவரும் ஆளுங்கட்சியின் சிபாரிசு பெற்றவர்களாகவே உள்ளனர்.
அரசு வழக்குரைஞர்கள், வெளிப்படையான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்று, பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.
ஆகையால், தகுதி வாய்ந்தவர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு வழக்குரைஞர்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிகளை வகுப்பதற்கு, நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்குரைஞர்கள் ஏ.எல்.சோமையாஜி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி(தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர்கள்) ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அரசு வழக்குரைஞர்கள் நியமனங்களுக்கான புதிய வரைவு விதிகளை வகுத்து, உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 13-இல் இருவரும் தாக்கல் செய்தனர்.
பின்னர், இந்த வரைவு விதிகளில், ஏதேனும் ஆட்சேபம் இல்லாவிட்டால் அவற்றை அறிவிப்பாக வெளியிடலாம் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞர்கள் நியமனம் என்பது அரசின் அதிகார வரம்புக்குட்பட்டதாகும். இவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, வழக்குரைஞர்கள் நியமன விவகாரத்தை அரசின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். இருப்பினும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை அரசு முறையாக பின்பற்றவில்லை என கருதினால், மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.