மருத்துவராக சொல்கிறேன்... பன்றி காய்ச்சலால் மரணம் நிகழாது" - அமைச்சர் விஜயபாஸ்கர் !!

"பன்றிக்காய்ச்சலால் 6 பேர் இறந்த தகவலை மறுத்திருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண காய்ச்சலின் ஒருவகை என உலக சுகாதார நிறுவனமே

தெரிவித்துள்ளது. இறந்த 6 பேருக்கு பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு இருந்தது உண்மை. ஆனால் இறப்புக்கு காரணம் அதுவல்ல. சாதாரண பன்றிக்காய்ச்சலுக்கு டாமிஃபுளு மாத்திரையை எந்த நிலையில் எடுத்துக்கொண்டாலும் குணமாகும். ஆனால் நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய், கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்து சிகிச்சைக்கு தாமதிக்கும்போதுதான் மரணம் சம்பவிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கடைசிநேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு காலதாமதமாக வந்ததால்தான் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கென சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 16 லட்சம் டாமிஃபுளு மாத்திரைகள் மற்றும் 2 லட்சம் வேக்சின்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கும் இவை இலவசமாக தரப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தெரிந்த 8 மணிநேரத்தில் ஸ்வேப் பரிசோதனை மூலம் பன்றிக்காய்ச்சலை உறுதிசெய்து டாமிஃபுளு மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் காய்ச்சல் குணமாகிவிடும். இந்த பரிசோதனை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே செய்யப்படுகிறது. அமைச்சராக மட்டுமின்றி ஒரு மருத்துவராகவும் சொல்கிறேன், பன்றிக்காய்ச்சலினால் ஒருபோதும் மரணம் சம்பவிக்காது. மக்கள் அதுகுறித்து பீதி கொள்ளத்தேவையில்லை" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...