SSTA வின் ஒருவருட மெளனம் ஏன் ??*தொடர் போராட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் !!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.                                   (2009 க்குபின் நியமிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள் இழந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்ய ?? )                                                                                          
மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு -9300+4200 என  வழங்கப்பட்டு வருகிறது .ஆனால் அது தமிழகத்தில் வழங்கப்படவில்லை என அறிந்ததே.                                              *ஆனால் 5200-2800 தர ஊதியம் பெறும் மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 6 வது ஊதியக்குழுவில்  நுழைவூதியம் ( ENTERY PAY -8360-2800  சேர்த்து -11,360 )வழங்கப்பட்டு வந்தது.       இதுவும் தமிழகத்தில் வழங்கப்படாமால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.*            இதுகுறித்து எந்த இயக்கமும் அறிந்திருக்கவில்லை.                                     இதனால் இதுவரை இழந்தது 6 இலட்சத்திற்கு மேல் ,*மத்தியில் புதிதாக அமுல்படுத்தப்பட்ட 7 வது ஊதியக்குழுவில் நமது தர ஊதியமான -2800 க்கு நுழைவு ஊதியம் -29,200*      
                                                                                      (11,360 நுழைவூதியம் பெற்றவர்கள் மட்டுமே இதில் நிர்ணகிக்கப்படுவர் ).                                                                                          
 🌹 இச்சூழலில் 7 வது ஊதியக்குழுவில் நமக்கு ஊதியநிர்ணயம் செய்யும் பொழுது *2009 ல் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்கள் ரூ2400 தர ஊதியகட்டிற்கும், 2012 க்குபின் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்கள் ரூ2000 தரஊதிய கட்டிற்கும் நிர்ணயம் செய்யப்படுவர்*.

*

 🌹இந்த ஊதிய முரண்பாடு அடுத்த 7 வது ஊதியக்குழுவிலும் தொடர்ந்தால்  இப்போது *நாம் இழந்த ரூ6,00,000 த்தை விட இன்னும் பல இலட்சம் இழப்பு ஏற்பட்டு நமக்கும் நமக்கு முன் உள்ளவர்களுக்கும் உள்ள ஊதியமுரண்பாடு மாததிற்கே பல ஆயிரங்களை தாண்டும்.

 🌹இதனைக் கருத்தில் கொண்டுதான் *நமது SSTA, கடந்தாண்டு பிப்ரவரியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்தது.ஆனால் அப்போதே சுமார் 10,000 இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு மூன்று நாட்கள் ஒன்றாக , திரண்டிருந்தால் 6 வது ஊதியக்குழுவில் வென்றிருப்போம்.ஆனால் அதற்கு மாறாக ஆயிரக்கணக்கானோர் தொடர்போராட்டத்தில்  கலந்துக் கொள்ள முடியாத காரணத்தினால் 6 வது ஊதியக்குழுவில் வென்றெடுக்கமுடியவில்லை.                                                                                        *ஆனால் நமது உறுதியான 8 நாள் உயிர்துறக்கும் போராட்டத்தின் பலனாக.   அரசு நம்முடைய  நியாயமான கோரிக்கையை ஏற்று 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இ.ஆ களுக்கு 7வது ஊதியக்குழுவில் ஊதியமுரண்பாடு களைய பரிந்துரைக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமான உறுதி மொழியை SSTA விற்கு அரசு அளித்துள்ளது.*               ( தமிழகத்தில் SSTA வைத்தவிர வேறு எந்த இயக்கமும் இதுவரையில் ஊதிய முரண்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த ஓர் உறுதிமொழியையும் பெற்றதில்லை )

🌹தற்போது தமிழக  அரசின் 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் பலகட்ட தொடர் போராட்டங்களை கையில்  எடுக்கவுள்ளது.          

 🌹*இதையும் தாண்டி தமிழக அரசு ஊதியக்குழுவில் நமது இ.ஆ கள் ஊதியமுரண்பாட்டை சரிசெய்யாவிட்டால் ; ஊதியக்குழு அறிவிப்பு வெளியான அடுத்தநாளிலிருந்து சாகும் வரை தொடர்உண்ணாவிரதம் ,மறியல் போராட்டம் நடத்தப்படும் .*( 10 பேர் உயிர்துறந்தாவது இழந்த ஊதியத்தை பெறுவோம்)

🌹நமது SSTA-- 7 வது ஊதியக்குழு அமைவதற்காக தான் 1 ஆண்டாக காத்திருந்தது.

🌹* இப்போது விட்டால் எப்போதும் வெல்லமுடியாது. (8,9 வது ஊதியக்குழு).                                                                        நீங்கள் எந்த இயக்கத்தையும் சார்ந்திருக்கலாம்.நீங்கள் தொடர்ந்து அதிலே இருக்கலாம் ,ஆனால் இந்த ஊதியமுரண்பாடு பற்றி வேறுஎவரும் குரல்கொடுக்கவில்லை ஆகவே , நமக்குரிய இப்பாதிப்பை நாம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்.            எனவே SSTA வின் போராட்ட அறிவிப்பு வெளியானவுடன் பாதிக்கப்பட்ட  இடைநிலை ஆசிரியர்கள் என்பதனைக் கருத்தில் கொண்டு இயக்கம்-சங்கம்- கூட்டணி என்ற வேறுபாடு பாராமல்.      நம் குடும்ப நலன் காக்க !!                              நம் 8 ஆண்டுகள் அவலங்கள் நீங்க!!    நம் வாழ்வை காக்க நம் நலனுக்காக நாம் ஒருங்கிணைந்து போராடுவோம் வென்றுகாட்டுவோம் !!    
                                                                                    உறவுக்கு குரல் கொடுப்போம் !!                   உரிமைக்கு உயிர்  துறப்போம் !!                  
 🌹*என்றும் ஆசிரியர்களுக்கான உங்கள் SSTA*🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...