வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பார் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ரோகிண்டன் ஃபாலி நரிமன்
அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றக்கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.