தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் துவங்கி இருப்பதால், தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுகள் காரணமா? : மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது. ஆனால், மே மாதம் பள்ளிகளுக்கு முழுஆண்டு தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாக வேண்டி உள்ளது. இந்நிலையில் தேர்தலை நடத்தினால் அது மக்களை பாதிப்பதாக இருக்கும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் இந்த வாதத்தை ஐகோர்ட் ஏற்காது, வேண்டுமென்றே தேர்தலை தள்ளி வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. முதல் பணியாக வாக்காளர் இறுதி பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கி உள்ளது. சத்தமில்லாமல் தேர்தல் பணி : இதைத் தொடர்ந்து ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணியும் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மார்ச் 6 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
அப்போது, தேர்தல் நடத்துவது குறித்த தகவல்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் தேர்தல் தேதி அல்லது தேர்தல் குறித்த புதிய அறிவிப்புக்கள் அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.