முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம் !!

தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.



சசிகலா தரப்பை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதற்கு பின் இன்று முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் மொடங்கியுள்ள கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெடுவாசல் போராட்டம், நீட் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...