சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுபெற்ற சஞ்சய் கிஷன் கவுல், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி
விடைபெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துவரும் இந்திரா பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்திரா பானர்ஜி, கடந்த 2002ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். பின், கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இரு வாரங்களில் பதிவியேற்கவுள்ளார்.
Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
உயர்நீதிமன்றத்தில் தாது மணல் வழக்கு போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்திரா பானர்ஜி பதவியேற்றபின் இவை அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என்று தமிழக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி ஆவார். இதற்கு முன்பு முதல் பெண் தலைமை நீதிபதியாக காந்த கமாரி பட்நாகர் என்பவர் 1992 முதல் 1993 காலகட்டத்தில் பதவி வகித்தார். .
முன்னதாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எச்.ஜி.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.