முதல்வர் பழனிச்சாமி அணிக்கு நான் மாறவில்லை என்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
ரூ.1487 கோடி மதிப்பிலான 7508 திட்டங்களை சென்னையில் இருந்து முதலமைச்சர் பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி
வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பழனிச்சாமி அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தவரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான நட்ராஜ் எம்.எல்.ஏ.பங்கேற்றார்.
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவர் முதல்வர் பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விழாவில் கலந்துகொண்டது பற்றி எம்.எல்.ஏ நட்ராஜ் கூறுகையில், "மயிலாப்பூர் தொகுதி சார்ந்த திட்டங்களும் தொடங்கப்பட்டதால் விழாவில் தான் பங்கேற்றதாகவும். இந்த விழாவில் பங்கேற்றதால் தாம் பழனிச்சாமி அணிக்கு மாறியதாக வெளியான தகவலுக்கு நட்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.