தமிழக அரசின், டில்லி சிறப்பு பிரதிநிதியாக, முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் சட்டம் படித்துள்ளார். கடந்த, 1989லிருந்து, அ.தி.மு.க.,வில் இருந்து வரும் அவர், 1996ம் ஆண்டு, ராஜ்யசபா எம்.பி.,யாக, தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 2001 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு,
எம்.எல்.ஏ,வான அவர், அ.தி.மு.க., அரசில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக பணியாற்றினார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். ஜெ., மறைவுக்கு பிறகு, சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்த அவர், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அவரது அக்காள் மகன் தினகரனின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.அதற்கு பரிசாக, டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி கிடைத்துள்ளது. இப்பதவி கேபினட் அந்தஸ்து கொண்டது; டில்லியில் அலுவலகம் தரப்படும். சென்னை தலைமை செயலகத்திலும், அவருக்கு அலுவலகம் ஒதுக்கப்படும்.