வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்கள் உடல் ரீதியான வன்முறைகளால் அச்சுறுத்தப்படுவதும், கேலி செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சமூகவலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கும் வகையில் “ஐ எம் ட்ரோல்ட் ” (‘I am Trolled’ ) ஆப்ஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு சமமாக பெண்களும் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர் என தெரிவித்துள்ளார். பெண்களுக்கான பேனிக் பட்டன் ”ஷவுட்டிங் ஆப்ஸ்” உள்ளிட்ட வசதியுடன் மார்ச் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதற்கான பணிகளை செல்பேசி வன்பொருள் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு வன்முறை, சுகாதார மற்றும் சட்ட சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளில் "சகி" என்னும் 600 உதவி மையங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், 'பெண்கள் தொழில் முனைவு கவுன்சில்’ அமைத்து அமேசான் ஆன்லைன் போர்ட்டல் மஹிலா-இ- ஹாட் உடன் இணைந்து, பெண்கள் வீட்டில் இருந்தே தாங்கள் தயரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளர்.