புதுச்சேரி மாநிலம், காரைக்காலில், இன்று(மார்ச் 4) காலை, 8 மணி முதல், மதியம், 2 மணி வரை பேய் மழை பெய்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால், தமிழகத்தின் நாகை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
உலக பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் மார்ச் முதல் வாரம் கனமழை பெய்யும் என, தமிழ்நாடு வெதர்மேன் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தது.
அதன்படி தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நேற்று முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இச்சூழ்நிலையில், காரைக்காலில் இன்று காலை 8 மணி முதல் மதியம், 2 மணி வரை 6 மணி நேரத்தில், 17 செ.மீ., மழை பெய்துள்ளது. அருகில் உள்ள நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தாலும், காரைக்காலில் பேய் மழை பெய்தது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. காரைக்காலில் பேய் மழை பெய்த போது தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் ஓரம் நிறுத்தப்பட்டன.