மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் சந்தேகம் எழுப்பிவரும் நிலையில், ஜெயலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று தமிழக அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையை அரசு வெளியிட்டது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே உள்ள மருத்துவர்களுடன் அவருக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சேர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அதன்பின்னர் அவர் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் சந்தேகங்களும் எழுந்தன. தமிழகத்தின் பல கட்சிகளும் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனால் சில வாரங்களுக்குமுன்பு அப்பல்லோ மருத்துவர்களும், லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோரும் செய்தியாளர்களைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை தொடர்பாக விளக்கினர்.
அதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்கூட அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது தொடர்பாக நேற்று கேள்விகள் எழுப்பினார். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு, ஐந்து அறிக்கைகளை இன்று தாக்கல் செய்தது. தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், எய்ம்ஸ் துணை இயக்குநர் ஸ்ரீனிவாஸ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை சுகாதாரத் துறை செயலாளர் இன்று மாலை வெளியிட்டார்.