மாணவர்களுக்கு பரிசுத் தொகை : முதல்வர் வழங்கினார்!

அரசு பொதுத்தேர்வில், கடந்த கல்வியாண்டில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி நேற்று பரிசுத்தொகை வழங்கினார். அரசுப் பள்ளிகளில் படித்து, பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு அரசு சார்பில்

ஆண்டுதோறும் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

அதன்படி, கடந்த 2015 - 16 கல்வியாண்டில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில், தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில், முதலிடம் பெற்றவர்களுக்கு ஏற்கனவே பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இரண்டாமிடம் பிடித்த 21 மாணவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் காசோலையும், மூன்றாம் இடம்பிடித்த 22 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்படவுள்ளது.

அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம்பிடித்த 69 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் காசோலையும், மூன்றாம் இடம்பிடித்த 424 மாணவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்படவுள்ளது.

இதில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்களுக்கு மட்டும் 1.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...