பள்ளிகளில் மதிய உணவு : ஆதார் கட்டாயம்!

பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏழை மாணவர்கள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடும் வகையில் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதனால்

பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் ஆதார் எண்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும். அதே போல் சமையல்காரர்களும் உதவியாளர்களும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் பலர் வீட்டில் இருந்தே மதிய உணவு கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. எனவே, மதிய உணவு திட்டத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்துக்குள் ஆதார் எண் வழங்காத மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், மதிய உணவை மட்டுமே நம்பியுள்ள பெரும்பாலான மணவர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...