இனி யூ-டியூப் மூலமாக தொலைக்காட்சி பார்க்கலாம்! - "யூ-டியூப் டி.வி" அறிமுகம்!

வீடியோக்களைப் பகிரும் பிரபல சோஷியல் மீடியாவான யூ-டியூப், கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது. யூ-டியூப் குறைவான கட்டணத்துக்கு 'Unplugged' என்ற பெயரில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்கப் போவதாக சில வருடங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.



இந்நிலையில் மன்ஹாட்டன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 'யூ-டியூப் டி.வி' என்ற பெயரில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக யூ-டியூப் அறிவித்துள்ளது. இதன் மூலம் பிரபல டி.வி சேனல்களின் ஒளிபரப்பை நேரடியாக நேயர்கள் கண்டுகளிக்க முடியும். இது மட்டுமில்லாமல், யூ-டியூப் தளத்தில் இருக்கும் மற்ற வீடியோக்களையும் இந்த சேவையில் நேயர்கள் கண்டுகளிக்க முடியும்.

பயனர்கள் மாதத்துக்கு 35 டாலர்கள் மாதக் கட்டணமாக செலுத்தி இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். யூ-டியூப் டி.வி சேவை முதல்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...