பயிர் காப்பீட்டுத் திட்டம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு சிரமத்தை உருவாக்கும். விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் எனில், அவர்களிடம் கண்டிப்பாக ஆதார் எண் இருக்க வேண்டும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. ஆதார் திட்டம், காங்கிரஸ் ஆட்சியில்
கொண்டுவரப்பட்டிருந்தாலும், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொதுமக்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் அவசியம் என வற்புறுத்தி வருகிறது. மேலும் தற்போது இந்தியாவில் அனைத்து திட்டத்துக்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துவருகிறது.
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று கூறிய மத்திய அரசு, ஏழை மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவதற்கும் ஆதார் அவசியம் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானபோதும் மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை. இந்நிலையில், நேற்று ஆதார் எண் கிடைக்கும் வரை பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் வேறு அடையாள அட்டையைப் பயன்படுத்தி அரசின் நலத் திட்டங்களை பெற்றுக்கொள்ளலாம் என நேற்று அறிவித்தது. ஆனால் இன்று, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அவசியம் என்று கூறுகிறது. மேலும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அனைவரும் கட்டாயம் ஆதார் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பல்வேறு சிரமத்தை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிர் காப்பீட்டுத் திட்டம்
விவசாயிகளுக்கு இழப்பீட்டை சரியாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்ய 17, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கர்நாடக மாநிலம், பெலகாவியில் பிரதமர் மோடி, ‘பிரதம மந்திரி காப்பீடு யோஜனை’ திட்டத்தை பிப்ரவரி 18, 2016ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு ஐந்து சதவிகிதமும், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட பயிர்களுக்கு இரண்டு சதவிகிதமும் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பயன்கள்
அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கும் காப்பீடு செய்ய முடியும்.
தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கும் இழப்பீடு உண்டு.
தேசிய வேளாண் திட்டத்தில் கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே புயல் காப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் புதிய திட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் புயல் இழப்பு வழங்கப்படும்.
புதிய திட்டத்தின்கீழ் 30 முதல் 45 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என கூறுகின்றனர்.
விதைப்புக்கும் அறுவடைக்கும் இடைப்பட்ட காலத்தில் காற்று மற்றும் பூச்சி தாக்குதலால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் மொத்தக் காப்பீட்டு தொகையில் 25% அப்போதே பெற்றுக் கொள்ளலாம்.