குற்றவாளிகளின் அரசியல் ஆதிக்கம் : அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்பதற்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் அசுவிணி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல வழக்கில்
கூறியிருப்பதாவது: அரசு மற்றும் நீதித்துறை ஊழியர்கள் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வாழ்நாளெல்லாம் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது. குற்றம் மற்றும் ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் சிறை சென்றால் அவர்களின் தண்டனைக் காலம் முடிந்து அதன்பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.எல்.ஏ., ஆகலாம். அமைச்சராகக்கூட ஆக முடியும். அரசு, நீதித்துறை ஊழியர்களை ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் மாறுபட்ட விதிகளை நாம் கொண்டுவரக் கூடாது.

வாழ்நாளெல்லாம் தேர்தலில் நிற்பதற்கு அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்காதவரையில், குற்றவாளிகளின் அரசியல் ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது. எனவே, குற்றவாளிகள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா அடங்கிய அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிப்பதில் தங்கள் நிலைப்பாடு என்ன என, இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி, அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வயதுவரம்பு கொண்டுவருவது குறித்தும் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...