அமைச்சர்களுக்கு புதிய கார்கள் தயார்!

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 31 அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் பயணிப்பதற்காக தலா 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 இன்னோவா கிரிஸ்டா ரக கார்கள் வாங்கப்பட்டுள்ளன.



இவை அனைத்தும் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை முன்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கார்கள் மீது சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. விரைவில் இந்தக் கார்கள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...