கொளுத்தும் கோடை வெயில் : ஆந்திராவில் 17 பேர் பலி!!!

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு ஒரே வாரத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சுட்டெரிக்கும் வெயில் :



கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி அருகே உள்ள வரதய்யபாளையம், ஸ்ரீகாளஹஸ்தி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் ஒரே வாரத்தில் வெயிலின் கொடுமைக்கு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வெயில் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான 200-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போதே வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதத்தில் பல இடங்களில் வெப்பத்தின் அளவு 115 டிகிரியை தாண்டும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் உயிர் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...