தமிழகப்பள்ளிக்கல்வித் துறை உடனடியாகச் செய்ய வேண்டிய 5 மாற்றங்கள் என்ன?

1. காலை உணவுத் திட்டத்தை அமலாக்குங்கள்!*
...........சமூகப் பொருளாதாரத் துறையில் எவ்வளவோ முன்னேறியிருக்கும் தமிழகம்  தம் பிள்ளைகளில் கனிசமான ஒரு பகுதியினரை இன்னும் பசியிலும் ஊட்டக்குறைபாட்டிலும் விட்டுவைத்திருப்பது சமூகக் குற்றம். முதலில், நம் மாணவர்களை ஆரோக்கியமானவர்களாக உருமாற்ற வேண்டும். அது நல்ல கல்விக்கும் அவர்களை இட்டுச் செல்லும். அதற்கு இத்திட்டம் பெரிய அளவில் உதவும்.
............

*2. பாடத்திட்டத்தைத் தரம் உயர்த்துங்கள்!*
.............மத்திய கல்வி வாரியப் பாடங்களிலிருந்தும்; கேரளா போன்ற கல்வித்துறையில்  முன்னணியிலுள்ள மாநிலப் பாடங்களிலிருந்தும்; இன்று சர்வதேச அளவில் மேம்பட்ட *'கான் அகாடமி'*யின் பாடத்திட்டங்களிலிருந்தும் நமக்கேற்ற வகையில் சுவீகரித்துக்கொள்ள வேண்டும். ..............

*3. கல்வியை அரசியல்மயப்படுத்துங்கள்!*
................சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ளத்தக்க ஒரு வரலாறு தமிழகத்தில நடைபெற்ற மொழிப்போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம், நம் தலைவர்கள் நம் நாட்டின் பன்மைத்துவத்திற்கு எப்படியான தியாகங்களைப் பங்களித்திருக்கின்றனர் என்பதும் சொல்லப்பட வேண்டும். தமிழகத்தின் வரலாறும் தமிழர்களின் சாதனையும் சொல்லப்பட வேண்டும். அதிகாரத்தின் மொழியாக தமிழ் மாற வேண்டும் என்றால், நாம் அதிகாரத்தை நோக்கிச் செல்பவர்களாக மாற வேண்டும் எனும் செய்தி கடத்தப்பட வேண்டும். ........

*4.ஆங்கிலத்தை எளிமையாக்குங்கள்!*
............பள்ளியில் பன்னிரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தும் ஏன் நம் குழந்தைகளில் பெரும்பாலானோரை ஆங்கிலத்தில ஒரு கடிதம் எழுதவைக்கக்கூட முடியாமல் போகிறது? ஆங்கிலம் பயிற்றிவிக்கும் முறையை முற்றிலுமாக மாற்ற வேண்டும்! 'பிரிட்டிஷ் கவுன்சில்' , ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களின் உதவியை நாடலாம். ஆங்கிலத்துக்கென்று பிரத்யேகமான், தரமான ஆசிரியர்களை உருவாக்கி சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். ...........

*5.தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்!*
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் படிக்காமலேயே ஒருவர்  பட்டம் வாங்கிவிடலாம் என்ற அவலச் சூழலுக்கு முடிவுகட்ட வேண்டும். கேரளா போல தமிழகத்தில். அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்புவரை இனி தமிழ் கட்டாயம் எனும் சட்டம் இயற்றி தாய்பொழியைக் காக்க வேண்டும். அது நம் பிள்ளைகளுக்கு, *'தமிழில் முடியும்; தமிழால் முடியும்'* எனும் தன்னம்பிக்கையை அளிப்பதாக உருவாக்கப்பட வேண்டும்.

*(இது கட்டுரையின் சுருக்கம் மட்டுமே. முழு கட்டுரையும் வாசிக்க 👇👇)*

*கட்டுரை ஆசிரியர்: சமஸ்.*
தி இந்து(தமிழ்)
30/04/17

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...