6 ஆண்டுக்கு பின் அண்ணா நூலகத்துக்கு விடிவு 'ஓபி' அடிக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!!

ஆறு ஆண்டுகளாக கேட்பாரின்றி இருந்த அண்ணா நுாலகம், மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. 'ஓ.பி., அடிக்கும் ஊழியர்கள், சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என எச்சரிக்கப் பட்டு உள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில், 3.75 லட்சம் சதுர அடியில், 178 கோடி ரூபாய் செலவில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டது. எட்டு மாடிகள் கொண்ட இந்த கட்டடம், 2010ல் திறக்கப்பட்டது.


பின்னர் வந்த ஆட்சியில், நுாலக கட்டடத்தை, குழந்தைகள் மருத்துவ மனையாக மாற்ற முடிவானது. ஆனால், நீதிமன்ற தலையீடால், நுாலகமே செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும், நுாலக பராமரிப்பில்,
பள்ளிக்கல்வி செயலராக இருந்த சபிதா, இயக்குனர் கண்ணப்பன்,இணை இயக்குனர் சுகன்யா ஆகியோர், உரிய அக்கறை காட்ட வில்லை. இது குறித்து, தினமலர் நாளிதழில், பலமுறை விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, உயர்நீதி மன்றத்தின் உத்தரவால்,படிப்படியாக பராமரிப்பு பணிகள் துவங்கின.

பள்ளிக்கல்வியின் புதிய செயலராக பொறுப்பேற் றுள்ள உதயச்சந்திரன், தன் நேரடி கட்டுப்பாட்டில், அண்ணா நுாலக பணிகளை துவங்கியுள்ளார். அதனால், ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அண்ணா நுாலகம் புத்துயிர் பெற்றுள்ளது.அனைத்து ஊழியர்களும், அதிகாரி களும் அடங்கிய, நிர்வாக குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும், ஒரு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 'ஓ.பி., அடிக்கும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எட்டுதளங்களிலும் புத்தக பிரிவில், தேவைப்படும் புத்தகத்தை எழுதி வைக்க, கருத்து புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. நுாலகத்திலுள்ள அனைத்து கேமராக்களும், 24 மணி நேர இயக் கத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. போட்டி தேர்வுக்கு படிப்போருக்கு, வாரம் தோறும், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மூலம், கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. நுாலக வாசிப்பாளர்களின் பெயர், முகவரிகள் பதிவு செய்யப்படுகின்றன.

நுாலக கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு, குடிநீர் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 'வாரம் ஒரு ஆளுமை' என்ற பெயரில், ஒவ்வொரு சனிக் கிழமையும், ஒரு எழுத்தாளரின் சொற் பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்டம் என்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...