மத்திய அரசு ஊதியமும் வழங்கவில்லை !! மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியருக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை !! இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் !!

இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டகளத்தில் குதிக்கின்றனர்,அனைத்து பிரிவினரும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம் நடத்திவரும் வேளையில் ,மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்....


இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 23.04.2017 அன்று சென்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம்... மத்திய அரசின்  6-வது ஊதிய குழு பரிந்துரைகள் கடந்த 1.6.2009 முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டது... இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.5200-20200என்றும்,தர ஊதியம் ரூ.2800 என்றும் அறிவிக்கப்பட்டது.மத்திய அரசில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300 என்றும் தர ஊதியம் ரூ.4200 என்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது... ஆனால் தமிழகத்தில் மட்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.06.2009 க்கு முன் நியமனம் பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் 8370-2800 தர ஊதியம் என வழங்கப்பட்டு வருகிறது ... 01.06.2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் 5200-2800 தர ஊதியம் என அடிப்படை ஊதியத்திலேயே  வேறுபாடு உள்ளது...   மத்திய அரசில் 1800 தர ஊதியம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு தான் அடிப்படை ஊதியம் 5200 மற்ற அனைத்து பிரிவினருக்கு ,5560,6410, 7260 என உள்ளது.                                     இதை மாற்ற கோரிய போது     ..சாதாரண நிலையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 சிறப்பு ஊதியமும்,தேர்வு நிலை மற்றும் சிறப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டது... தமிழகத்தில் Diploma படித்த அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மாற்றினர். ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியமாற்றம் செய்யப்படவில்லை .                           இதனை தொடர்ந்து முரண்பாடுகளை மறுபரிசீலனை செய்து அதனை நீக்க அப்போதைய நிதித்துறை செயலாளர்(செலவினம்) கிருஷ்ணன் தலைமையில் 3நபர் குழு அமைக்கப்பட்டு ஓராண்டுக்குப்பின்னர்  கிருஷ்ணன் தலைமையிலான குழு கூடி தனது பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது..அதன் அடிப்படையில் தமிழக அரசு 88அரசு ஆணைகளை பிறப்பித்தது..இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களின் உயர்த்தப்பட்டது,பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு கூட -9300-4200,4400 வழங்கப்பட்டது .     ஆனால் 10,+12, Diploma என படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அறிவிக்கப்படவில்லை..                6- வது ஊதியக்குழுவிற்கு முன்பாக எந்த ஊதியக்குழுக்களிலும் மாநில அரசிலேயே இருவேறு அடிப்படை ஊதியம் இருந்தது இல்லை....            மத்திய அரசில் 2800 தர ஊதியம் பெறும்  ஊழியர்களுக்கு 8370 அடிப்படை ஊதியம் 7 வது ஊதியக்குழு அமுல் படுத்தும் நாளது வரை வழங்கிவந்தனர்... தமிழகத்தில் இந்த முரண்பாட்டால்                                மாநிலத்தில் ஒரே கல்வி தகுதியுடன்,ஒரே பள்ளியில்  பணிபுரியும்  இடைநிலை ஆசிரியர்கள் இடையே அடிப்படை ஊதியத்தில் மட்டும் ரூ.3170 -2009 ல் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...                                         8 ஆண்டுகள் கடந்த நிலையில்  இன்றைக்கு மொத்த ஊதியத்தில் சுமார் -12,000 வரை மாதம் தோறும் இழப்பு ஏற்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் (RTE)தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு  இது போன்று ஊதியம் வழங்குவது முறையா??         மிகவும் சொற்பமான ஊதியத்தை கொண்டு வெளிமாவட்டங்களில் பணியாற்றி ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கி வாழ்வை நடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம்...இந்த நிலை ஏழாவது ஊதியக்குழுவிர் தொடர்ந்தால் 2009 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2400 தர ஊதியத்திலும் ,2012 தகுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2000 தர ஊதியத்தில் நிர்ணகிக்கப்படுவர்.                  எங்களுக்கு ்.                                           *மத்திய அரசு ஊதியமும் வழங்கவில்லை !! மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியருக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை !!                                    எனவே இந்த ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய 2016 பிப்ரவரி 20 முதல் 28 வரை 8 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்...          போராட்டத்தில் உள்ள நியாத்தையும்  தீவிரத்தையும் , உணர்ந்த அரசு பிப்ரவரி 28 இல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்தை வழங்கியது...    .                                          *அதில் 2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும்  7 ஆவது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் களைய பரிந்துரை செய்யப்படும்*              என்ற உத்திரவாதத்தினை அரசு அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது...                     தற்போது 7 ஆவது ஊதிய குழு அமைக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற கோரி தான் 7ஆவது ஊதியக்குழுவில் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் அரசின் கவனத்தை ஈர்த்து  ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,                               பணிநியமன விபரம் --2009 ஆண்டில் மாநில  அளவிலானபதிவு மூப்பு அடிப்படையில்-7123 ஆசிரியர்களும்  அதன்பின்பு 2012,2014 தகுதித் தேர்வின் அடிப்படையிலும் -14,000 ஆசிரியர்கள் மொத்தம் இருபதாயிரம் ஆசிரியர்களே பாதிக்கப்பட்டுள்ளோம்..அதிலும் ஒரு சில ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளனர்...       எனவே மிகவும் குறைந்த அளவில் உள்ள எங்களது கோரிக்கையினை ஏற்று எங்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றாலும் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இனணயான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஊதிய முரண்பாடுகளையும் களையும் வரை இது போல் பலகட்ட போராட்டங்களை நடத்திடுவோம்...இவண்- இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ( SSTA) மாநில பொதுச்செயலாளர், ஜே.ராபர்ட்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...