பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம்... காணோம்  வேடிக்கை பார்க்கும் கு.மா.வா., அதிகாரிகள்!!!

மணலி, புது எம்.ஜி.ஆர்., நகரில், குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான, பல கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.புது எம்.ஜி.ஆர்., நகர் விரிவு பகுதியை, குடிசை மாற்று வாரியம், 1992ல் கையகப்படுத்தியது. அதை தொடர்ந்து, அங்கு பல காலமாக வசித்து வந்தவர்களுக்கு இடம் ஒதுக்கியது போக, 10 கிரவுண்ட் அரசு நிலம் இருந்தது. இதன் மதிப்பு, பல கோடிகளாகும். இந்நிலையில், இந்த இடம் காலியாக இருப்பதால், பல்வேறு கால கட்டங்களில், பலர் ஆக்கிரமித்து, குடிசைகள் கட்டிவிட்டனர்.இடம் அனைத்தும்

ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், 10 கிரவுண்ட் இடம் இருந்த தடம் தெரியாமலேயே போய்விட்டது. தற்போது, வெறும், அரை கிரவுண்ட் நிலம் மட்டுமே இருக்கிறது. அதற்கும் பலர், உரிமை கொண்டாடுகின்றனர். இதனால், அடிக்கடி அடிதடி ஏற்படுகிறது. மணலி காவல் நிலையத்திலும், இது குறித்து பல்வேறு புகார்கள் பறந்த வண்ணம் இருக்கிறது.போலீசாரும், இந்த விவகாரத்தில், கு.மா.வா., அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரியாமல் விழிபிதுங்கி போயுள்ளனர்.இதற்கு காரணம், 1996ல், அதிகாரிகளிடம் பணம் கொடுத்து, கு.மா.வா., இடத்திற்கு, பலர் போலி பில் பெற்றதே காரணம் என, கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஒரு இடத்திற்கு, இரண்டு - மூன்று பேர், பில் வைத்துள்ளனர். இந்த இடம், வாரியத்திற்கு சொந்தமான இடம் என, பெயர் பலகை உள்ளது. அப்படி இருக்க, பலர் இந்த இடத்தை எப்படி ஆக்கிரமித்தனர்; இதை, அதிகாரிகள் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இட விவகாரத்தில், உள்ளூர் அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதால், அதிகாரிகள் அஞ்சுகின்றனரா அல்லது அதிகாரிகள் பணம் பெற்று கொண்டு, ஆக்கிரமிப்பை அனுமதிக்கின்றனரா என, தெரியவில்லை. கு.மா.வா., உயரதிகாரிகள் கவனித்து, அரசு நிலத்தை மீட்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரும்பி பார்க்கவே இல்லைஇந்த நகர் உருவானது முதல், வசித்து வருகிறேன். கு.மா.வா., இடம் ஒதுக்கியது போக, 10 கிரவுண்ட் இடம் இருந்தது. அரசியல்வாதிகள் உட்பட பலர், அந்த இடத்தை ஆக்கிரமித்து விட்டனர். பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவொரு அதிகாரியும் பார்க்கக் கூட வருவதில்லை.ஆக்கிரமித்ததே தவறு; இதில், ஒரே இடத்திற்கு, பலர், பில் வைத்துக் கொண்டு குடிசை போட முற்படுவதால், அடிதடி ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.பகுதிவாசி, புது எம்.ஜி.ஆர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...