பணம் கொடுத்து வெற்றி பெறும் அரசியல்வாதிகள் பதவி பறிப்பு: சட்டத்திருத்தம் கொண்டுவர தேர்தல் ஆணையம் வலியுறுத்தல் !!

தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெறும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால் பதவி நீக்கம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யுமாறு மத்திய அரசை தேர்தல்

ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ஐ திருத்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தற்போது ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் தண்டிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை உள்ளது.

இந்த முறையில் வழக்கு விசாரணை இழுத்து அடிக்கப்படுவதுடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பலர் பயன்படுத்தி தப்பிவிடுவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடனேயே பதவி நீக்கம் செய்துவிட வேண்டும் என்பது  தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் ஐ.பி.சி.யின் கீழ் ஓராண்டு சிறைதண்டனை வழங்க மட்டுமே சட்டத்தில் இடம் உள்ளது. இதை பலமடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதும் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையாகும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை வாரண்ட் இன்றி கைது செய்ய வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...