சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 20 நிமிடங்கள் மட்டுமே பணியில் இருக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
*அரசு ஊழியர்களுக்கு 'செக்' :
இதற்கு முடிவு கட்டும் விதமாக 2014 ல் டில்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், பதவியேற்ற நாள் முதல் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புக்களையும், உத்தரவுகளையும் போட்டு வரும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அடுத்த அதிரடியாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் முறையை கொண்டு வந்துள்ளார்.
அவரது புதிய உத்தரவின்படி, உயரதிகாரிகள் முதல் கடை ஊழியர்கள் வரை அனைவருக்கும் பயோ மெட்ரிக் முறையிலேயே வருகைப்பதிவு கணக்கிடப்படும். அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும். அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், அரசு அலுவலகங்களின் வழக்கமான நடைமுறைகளை மாற்றுவதற்காகவும் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.