ஆதார் அட்டை வைத்து ஓட்டுப் போடலாம் : ராஜேஷ் லக்கானி !!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை வைத்து ஓட்டுப் போடலாம் என்று, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி 31.03.2017 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை குறிப்பிடும்விதமாக, ஏதேனும் ஒரு மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து ஓட்டுப் போடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

மேலும் , அடையாள அட்டை இல்லாதவர்கள், கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்), மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு, பாராளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை பயன்படுத்தி ஓட்டுப் போடலாம்.

மேலும் வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு செய்யும் அதிகாரி வழங்கப்பட்ட அடையாள அட்டையை, வாக்காளர் வைத்திருந்தால் அந்த அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணைய ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருந்தால் மட்டுமே ஓட்டுப் போட முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...