அரசு கேபிள், 'டிவி'க்கு, டிஜிட்டல் உரிமம் கிடைக்காது. ஆப்பரேட்டர்கள், தனியார் நிறுவனங்களுக்கு மாறுங்கள்' என, அரசு அதிகாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 'அனலாக்' எனப்படும் பழைய தொழில் நுட்பத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வாயிலாக, 63 லட்சம் குடும்பங்கள், கேபிள் இணைப்பு பெற்றுள்ளன. 'அனலாக்' தொழில்நுட்பத்தை விட்டு, 'செட்டாப் பாக்ஸ்' வழியாக கிடைக்கும், 'டிஜிட்டல்' ஒளிபரப்புக்கு மாற, மத்திய அரசு விதித்த கெடு, சமீபத்தில் முடிந்தது.அரசு கேபிள், 'டிவி'க்கு டிஜிட்டல் உரிமம் தராததால், ஐந்து ஆண்டுகளாக
நீதிமன்றத்தில், வழக்கு நடக்கிறது. அதனால், 'எந்த நேரத்திலும், சிக்னல் நிறுத்தப்பட்டு, தொழில் பாதிக்கப்படலாம்' என்ற அச்சத்தில், 25 ஆயிரம் அரசு கேபிள் ஆப்பரேட்டர் கள் உள்ளனர்.
எனினும், 'நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால், சிக்னல் நிறுத்தப்படாது' என, ஆப்பரேட் டர்களுக்கு அரசு கேபிள், 'டிவி' நம்பிக்கையூட்டி வருகிறது. இந்நிலையில், அந்த நம்பிக்கையை குலைக்கும் விதமாக, அரசு அதிகாரி பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் கூறியதாவது:
டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ள, ஒரு தனியார் நிறுவன, கேபிள் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா, நாகர்கோவிலில், நேற்று முன் தினம் நடந்தது. அதில் பங்கேற்ற, அரசு கேபிள், 'டிவி'க்கான தாசில் தார் மன்னான், 'அரசுக்கு, செட்டாப் பாக்ஸ் சேவை தருவதற்கான, டிஜிட்டல் உரிமம் கிடைக்காது; தனியார் கட்டுப்பாட்டு அறைகளில் சேர்ந்து கொள்ளுங்கள்' என, பேசியுள்ளார்.
அவரது பேச்சு, 'வாட்ஸ் ஆப்'களில், பரவி வருகிறது.சிக்கல் வராது; காத்திருங்கள்' என,அரசு கூறும் நிலையில், அதிகாரிகளின் இந்த பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதால், தனியாருக்கு மாற யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக, தாசில்தார் மன்னானை, பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், பேச முடியவில்லை. இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' உயர் அதிகாரிகள் கூறுகையில், 'விசா ரித்து, உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.