தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் மெஷின்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை விரைவாக வழங்குமாறு மத்திய அரசுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி கடிதம் எழுதி உள்ளார்.

மின்னணு ஓட்டு எந்திர சர்ச்சை
சமீப காலமாக மின்னணு ஓட்டு எந்திரங்கள், பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மின்னணு ஓட்டு எந்திரங்களில் மோசடிகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர்.
மின்னணு ஓட்டு எந்திரங்களுக்கு பதிலாக பழைய ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் தேர்தல் கமிஷனிடமும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமும் முறையிட்டன.
வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள்
இந்த நிலையில், தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வகை செய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை.
ஆனால் வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
தேவையான நிதி
2019–ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் இந்த எந்திரங்களை பயன்படுத்துவதற்கு 16 லட்சம் எந்திரங்கள் தேவைப்படுகின்றன. இவற்றை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 174 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த மாதம் 22–ந் தேதி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களை, அவற்றுக்கான நிதியை விடுவித்த 30 மாதங்களில் பாரத் மின்னணு நிறுவனமும், இந்திய மின்னணு கழகமும் தயாரித்து அளிக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் கடிதம்
இந்த நிலையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் எழுதி உள்ளார். *அதில் அவர் கூறி இருப்பதாவது:–*
தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள வகை செய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் வாங்குவதற்கு 2017–ம் ஆண்டு பிப்ரவரிக்குள் ஆர்டர் வழங்காவிட்டால், அவற்றை அடுத்த பொதுத்தேர்தலில் பயன்படுத்துவதற்கு வசதியாக, தயாரிப்பாளர்கள் 2018 செப்டம்பர் மாதத்துக்குள் தயாரித்து அளிப்பது சிரமம் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டி கடிதம் எழுதி உள்ளேன்.
நிதியை வழங்க நடவடிக்கை
இந்த எந்திரங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேலும் தாமதப்படுத்த முடியாது. எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு ஓட்டு எந்திரங்களுடன் இந்த வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களை இணைத்து பயன்படுத்துவதற்கு தேர்தல் கமிஷன் உறுதி பூண்டுள்ளது. அப்போதுதான் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும். மேலும், தேர்தலில் ஓட்டுப்பதிவு நேர்மையாக நடக்கிறது என்பதில் வாக்காளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த முடியும்.
எனவே இந்த எந்திரங்களை வாங்குவதற்கான நிதியை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் வாங்குவதற்கு மத்திய அரசுக்கு 11 முறை நினைவூட்டல் கடிதங்களை தேர்தல் கமிஷன் எழுதி இருப்பதும், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைமை தேர்தல் கமிஷனர் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.