நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு 104 நகரங்களில் நாளை நடக்கிறது. அதற்காக 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது. இந்த நுழைவுத்தேர்வை நடத்தும் பணி சிபிஎஸ்இ(மத்திய இடைநிலை கல்வி வாரியம்) வசம் ஒப்படைத்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மே 1ம் தேதி, ஜூலை 24ம் தேதி என இரண்டு
கட்டமாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதில் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின்கீழ் அரசு மருத்துவகல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்கள் இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற நிலையில், அதில் இருந்து விலக்குகோரும் சட்டமசோதாவை பிப்ரவரி 1ம் தேதி நிறைவேற்றியது. ஆனால் இதுவரை அதற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறவில்லை. ஒப்புதல் பெறாததால் தமிழகத்திலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக 11 லட்சத்து 35,104 மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 10 மொழிகளில் 104 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ளது. மத்திய அரசு பாடத்திட்டத்தின்கீழ் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து(தலா 45 கேள்விகள்) 180 கேள்விகள் கேட்கப்படும். தமிழகத்தில் சென்னை உள்பட 8 நகரங்களில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ விதித்துள்ளது. அதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
நீட் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: காலை 7.30 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7.30 மணி முதல் 9.45 மணி வரை மாணவர்களின் ஹால்டிக்கெட்களை சோதனை செய்வார்கள். காலை 9.30 மணிக்கு பின் மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை 9.45 மணிக்கு தேர்வு புத்தகம் வழங்கப்படும். காலை 9.55 மணிக்கு சீலிடப்பட்ட தேர்வு புத்தகத்தை மாணவர்கள் திறக்கலாம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடக்கும். விடைத்தாளை கருப்பு அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா பயன்படுத்தி மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். ஹால்டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தபால் அட்டை அளவிலான புகைப்படம் ஆகியவற்றை மாணவர்கள் கட்டாயம் எடுத்து வர வேண்டும். ஹால்டிக்கெட்டில் தவறான புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உடன் எடுத்து வர வேண்டும். இவ்வாறு சிபிஎஸ்இ தரப்பில் கூறப்பட்டுள்ளது.