பெண்கள் பெயரில் நிலம் வாங்கினால் ஒரு ரூபாய்க்குப் பத்திரப்பதிவு!

‘பெண்கள் பெயரில் நிலம் வாங்கினால், பத்திரப்பதிவு ஒரு ரூபாய்க்குச் செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண்கள் நிலம் வாங்கினால் அதற்கான பத்திரப்பதிவு வரி ஒரு ரூபாய் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் ராஞ்சியில் நடைபெற்ற நில மற்றும்
வருவாய்த்துறை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் அனைத்து வரைபடங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ், “பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களின் உரிமையைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். ஆன்லைன் பதிவு முறை மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது என நில மற்றும் வருவாய்த்துறை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஜார்க்கண்டில் பொதுவாக பத்திரப்பதிவு, நிலத்தின் மதிப்பில் ஏழு சதவிகிதமாகக் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...