முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

ஜூலை 2ல் நடைபெற உள்ள முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நம்புராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மே 9ல் வெளியான அரசாணையை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிட கோரிக்கை தெரிவித்துள்ளனர். 40% முதல் 70% குறைபாடு உள்ளோருக்கு மட்டுமே 3% இடஒதுக்கீடு என்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



 எவ்வித குறைபாடு  உள்ளோருக்கும் இடஒதுக்கீடு தேவை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை மத்திய அரசு 4% ஆக உயர்த்தியுள்ளதாகவும் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு பற்றி தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு வாரத்தில் பதில்தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 2ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...