சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் மே 11-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, துணைவேந்தர் செ.மணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுத் துறை சார்பில், தொலைதூரக் கல்வி இயக்ககத்தின்
மூலம் 1991 முதல் 2015 வரை படித்து தேர்ச்சி பெற்றவர்களில் பலர் தங்களது மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச் சான்றிதழை (Mark Sheet Utßm Convocation) பெற்றுக் கொள்ளாமல் தேர்வுத் துறையில் உள்ளன.
இந்த நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்புத் திட்ட முகாம் தேர்வுத் துறை அலுவலக வளாகத்தில் வரும் மே 11 முதல் 14ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
பல்கலை.யில் படித்து மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் பெறாதவர்கள் இந்த சிறப்புத் திட்ட முகாமில் பங்கேற்று பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், சான்றிதழ் பெற வருபவர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இதுதொடர்பான சந்தேகங்களுக்கு தேர்வுத் துறை, தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் படிப்பு மையங்களையும் தொடர்பு கொள்ளலாம் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்புக்கு: 04144-238027, 237368, 238358, 04144-238282, 238248 உஷ்: 578, 810 email: aucoecell2016@gmail.com