ஆதிதிராவிட மாணவர்கள் இன்ஜி., சேருவதில் சிக்கல் !!

தமிழக அரசு, நான்கு ஆண்டுகளாக கல்வி கட்டணத்தை செலுத்தாததால், ஆதிதிராவிட மாணவர்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, பிளஸ் 2முடித்த மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் சேரும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, உயர்கல்வி கட்டணம், அரசால் செலுத்தப்படுகிறது.மத்திய அரசிடமிருந்து, இதற்கான நிதியை, தமிழக அரசு பெற்று, பின், இன்ஜி., கல்லுாரிகளுக்கு வழங்கும். நான்கு ஆண்டுகளாக, தனியார் கல்லுாரிகளுக்கு, இந்த நிதியை வழங்காமல், தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், மாணவர்கள் எந்த தடையுமின்றி, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, ஆயிரக்கணக்கான மாணவர்கள், நான்கு ஆண்டு படிப்பை முடிக்கும் நிலையில், கல்லுாரிகளுக்கு இன்னும் நிதி கிடைக்கவில்லை. எனவே, இந்த ஆண்டு அரசின் சலுகை கட்டணத்தில், தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டணம் வராவிட்டால், அரசு சலுகை இல்லாத பிரிவில், மாணவர்களை சேர்க்க, கல்லுாரிகள் திட்டமிட்டு உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...