ரூ.1,250 கோடி வழங்குவதாக கூறிய வாய்மொழி உத்தரவு, அரசாணையாக வெளியிடப்பட்டால் மட்டுமே வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
இதனால் திட்டமிட்டபடி காலவரையற்ற நாளை முதல் நிறுத்தம் தொடங்கும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையில் ரூ.1,250 கோடி செம்டம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ரூ.750 கோடி வழங்க அமைச்சர் ஒப்புதல் அளித்திருந்தார்.
ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.750 கோடியுடன், மேலும் 500 கோடி ரூபாய் வழங்க அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
ரூ.1250 கோடி வழங்குவதாக கூறிய வாய்மொழி உத்தரவை அரசாணையாக வெளியிட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
அரசாணை வெளியிடும் வரை வேலை நிறுத்தத்தை வாபஸ் போவதில்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.