முன்கூட்டியே துவங்கிய போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் !!

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் முன்கூட்டியே துவங்கியதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியள்ளனர்.
அமைச்சருடன் போக்குவரத்து ஊழியர்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தங்களது வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்ததை தெரிந்த ஊழியர்கள் பல மாவட்டங்களில் பஸ்களை பணிமனைகளில் நிறுத்திவிட்டு போராட்டத்தை முன்கூட்டியே துவக்கியுள்ளனர்.
தஞ்சாவூரில் 120க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள், 56 புறநகர் பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூரில் போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை அருகில் உள்ள பணிமனைகளில் நிறுத்தி விட்டு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் 10க்கும் மேற்பட்ட பஸ்களை ஊழியர்கள் பணிமனையில் நிறுத்திவிட்டு போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஊழியர்கள் போராட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டால், மினி பஸ் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். இதே போல் பல இடங்களில் முன்கூட்டியே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் துவங்கியுள்ளதால், கிராமங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...