TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி !!

TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி குரூப் 2ஏ பதவியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும்
26 -ஆம் தேதி கடைசி நாளாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.


*குரூப் 2ஏ பிரிவில் வரும் உதவியாளர், கணக்காளர் பதவியிடங்களில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.*

 இந்த இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கை கடந்த மாதம் 27 -ஆம் தேதி (ஏப்.27) வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி (www.tnpsc.gov.in) இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26 ஆம் தேதியாகும்.

*விண்ணப்பித்த பிறகு, வங்கி அல்லது தபால் நிலையம் மூலமாக தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த மே 29 -ஆம் தேதி கடைசி நாள்*

குரூப் 2ஏ தேர்வுக்கு இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...