கர்நாடக மாநில பல்கலை., பாடத் திட்டத்தில் ஜி.எஸ்.டி பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. நாளை
ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் ஒரே வரிமுறை நடைமுறைக்கு வர உள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ராணி சின்னம்மா பல்கலையில் ஜி.எஸ்.டி பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலையில் உள்ள பி.காம் வகுப்பில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் ஆண்டு பாடத்தி்ட்டத்தில் மாணவர்கள், நடைமுறைப்படுத்தப்பட உள்ள வரி முறையை தெரிந்து கொள்ளும் விதமாக ஜி.எஸ்டி-1, ஜி,எஸ்.டி-2 என்ற பாடம் கட்டாயமாக்கபபட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் ஒரே நாடு ஒரே வரி முறை என்பதை பற்றி அறிந்துகொள்ள முடியும் என பல்கலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.