இணையம் மூலமாகப் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள சிக்கல்? அப்படி இணையம் மூலமாகப் பணத்தைத் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும் !!

பிஎப் பணத்தை இணையம் மூலம் திரும்பப் பெற விரும்பும் பலரை வழுக்காட்டாயமாகப் பிஎப் அலுவலகத்தை நோக்கி வர வைத்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் பான், ஆதார் மற்றும் யூனிவர்சல் கணக்கு எண் ஆகியவற்றில் பெயர் விவரங்கள் சரியாகப் பொருந்தத்து என்றும் கூறப்படுகின்றது.
வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒரு நிறுவனத்தை விட்டு நின்ற பிறகு பிஎப் பணத்தை இணையம் மூலமாகத்
திருப்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற சேவையை வழங்கி வருகின்றது.
இணையம் மூலமாகப் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள சிக்கல்?
அப்படி இணையம் மூலமாகப் பணத்தைத் திரும்பப் பெற பான், ஆதார் மற்றும் யூஏஎண் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் இதனைச் சில பிஎப் கணக்கு வைத்துள்ள சந்தாதார்கள் முயலும் போது வெற்றிகரமாகப் பணத்தைத் திரும்பப் பெற முடிவதில்லை. அப்படியானால் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ராஜேஷ் பிள்ளை என்பவரிடம் கேட்டு அறிந்துகொண்ட விவரங்களை இங்கு உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
# கணினிகல்வி#

விவரங்கள் சரியாகப் பொருந்த வேண்டும்
ஆதார், பான் மற்றும் யூனிவர்சல் கணக்கு எண் மூன்றிலும் உள்ள விவரங்கள் சரியாகப் பொருந்த வேண்டும். அப்படி இல்லை என்றால் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உங்கள் கோரிக்கையினைக் கணினி அமைப்பு ஏற்காது.


திருத்தம்
ஒருவேலை ஆவணங்களில் உங்களது விவரங்கள் சரியாக இல்லை என்றால் உங்கள் விவரங்களை மூன்றிலும் ஒரே மாதிரியாக இருக்கும்படி திருத்தம் செய்ய வேண்டும்.


யூனிவர்சல் கணக்கு எண்ணை எப்படித் திருத்துவது?
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று கூட்டு அறிவிப்புப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு உங்களது விவரங்கள் யூஏஎண் திருத்தப்பட்டு இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
கூட்டு அறிவிப்பு படிவத்திற்கான இணைப்பிற்கு இங்குக் கிளிக் செய்யவும்.
கையொப்பம்
விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து கையொப்பம் பெற்று வரும் போது வேகமாக இந்தப் பணியை முடிக்க முடியும்.
பிஎப் பணத்தைத் திரும்பப் பெற நிறுவனத்தின் கையொப்பம் அல்லது டிஜிட்டல் கையொப்பம் கட்டாயமாகத் தேவை.


புகார்
ஒரு வேலை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் கையொப்பம் இட மறுப்பு தெரிவித்தால் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...