அவ்வளவுதானா? மூடுவிழா தானா என்று மாணவர்கள் வெறுத்துப்போய் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?
48 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வி முறையில் இயங்கிவரும் பள்ளிக்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் அப்பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி லட்சுமிபுரம் கென்னடி நகரில் தமிழ் உயர்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. 1969ஆம் ஆண்டு தமிழ் ஆர்வலர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையுள்ள இந்தத் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினர்.
பின்னர் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு பள்ளிக்குப் புதியதாக ஆசிரியர்கள் நியமிக்காததால் 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற ஏழாம் வகுப்பு மாணவ - மாணவிகள் ஒன்பது பேருக்கு இப்பள்ளியில் படிக்க ஆர்வம் இருந்தும் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சேர்ந்து விட்டனர்.
கடந்த ஆண்டு வரை இப்பள்ளியில் 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வந்தநிலையில், இந்த ஆண்டு வெறும் 38 மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் விரைவில் இப்பள்ளியை மூடும் நிலை ஏற்படும் என்று திருப்பதி தமிழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.