தமிழக முதலமைச்சரின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சரின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளராக இருப்பவர் சிவதாஸ் மீனா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சரின் முதன்மைச்
செயலாளராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு மட்டுமே பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், இவரைப் பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இவர் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணைச் செயலாளராகத் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.