சென்னை மெட்ரோவில் சோலார் மின்சாரம்!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் தகடுகள் அமைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, சோலார் திட்டங்களை (தகடுகளை) அமைக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 6 மெகா வாட் மின் உற்பத்தித் திறனுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இதனால் மின்சாரச் செலவில் ஆண்டுக்கு ரூ.1 கோடி மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டால் இன்னும் அதிக தொகை மிச்சமாகும்.

மும்பையைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் இந்த ஆர்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடமிருந்து கைப்பற்றியுள்ளது. மெட்ரோ நிலையங்களில் அமைக்கப்படும் சோலார் தகடுகள் மூலமாக உருவாக்கப்படும் மின்சாரத்தை மின் விளக்குகள், மின் உயர்த்தி (லிஃப்ட்), மின் நகர்த்தி (எஸ்கலேட்டர்) உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். முன்னதாக கடந்த ஆண்டில் கோயம்பேடு மெட்ரோ தலைமையகத்தில் 1 மெகா வாட் சோலார் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...