வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்!!!

வரு­மான வரி வரம்­பிற்குள் வருவோர், வரு­மான வரிக் கணக்கு தாக்கல் செய்­வது அவ­சி­ய­மா­னது. ஜூலை 31ம் தேதிக்குள், இதை செய்ய வேண்டும். வரு­மான வரிக் கணக்கு தாக்கல் செய்­வதை தாம­தப்­ப­டுத்­தாமல், உரிய நேரத்தில் தாக்கல் செய்­வதன் மூலம், பல்­வேறு அனு­கூ­லங்­க­ளையும் பெறலாம். முன்­கூட்­டியே வரு­மான வரித் தாக்கல் செய்­வதால் கிடைக்கும் பலன்கள் இவை:


ரீபண்ட்: கூடு­த­லாக பிடிக்­கப்­பட்ட அல்­லது செலுத்­தப்­பட்ட வரியை திரும்ப கோரு­வ­தாக இருந்தால், முன்­கூட்­டியே வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, ரீபண்ட் விரை­வாக கிடைக்கும் வாய்ப்­புள்­ளது. வரி மிச்­ச­முள்ள படி­வங்­களை பரி­சீ­லிப்­பதை விட, ரீபண்­டிற்­கான படி­வங்­களை பரி­சீ­லிக்க அதிக அவ­காசம் தேவைப்­ப­டு­வதே இதற்கு காரணம். மேலும், செலுத்த வேண்­டிய வரியை விட, ரீபண்ட், 10 சத­வீ­தத்­திற்கு மேல் இருந்தால், வரிக் கணக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ரீபண்ட் மீது, 6 சத­வீத வட்டி வழங்­கப்­படும். தாம­த­மாக செலுத்தும் போது இந்த பலன்­களை பெற முடி­யாது.

ஆவ­ணங்கள்: முன்­கூட்­டியே வரி விஷ­யங்­களில் கவனம் செலுத்­து­வதன் மூலம் தொடர்­பு­டைய ஆவ­ணங்­களை சேக­ரிக்க போது­மான நேரம் கிடைக்கும். படிவம் 16, படிவம் 26 ஏ, கடன் சான்­றிதழ், வட்டி விபரம் போன்­ற­வற்றை பர­ப­ரப்­பில்­லாமல் திரட்­டலாம். இவற்­றுக்­காக கடைசி நேரத்தில் அல்­லாட வேண்டாம்.தவ­றுகள் திருத்தம்: வரு­மான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது, எவ்­வ­ளவு தான் கவ­ன­மாக இருந்­தாலும், சில நேரங்­களில் ஏதேனும் தவறு செய்ய வாய்ப்­பி­ருக்­கி­றது. உரிய நேரத்தில் வரு­மான வரிக் கணக்கு தாக்கல் செய்­தி­ருந்தால், இத்­த­கையை தவ­று­களை திருத்தி, அடுத்த ஆண்டு, ஜூலை 31ம் தேதிக்குள் மீண்டும் தாக்கல் செய்­யலாம். ஏதேனும் சான்­றி­தழை சேர்க்க மறந்­தி­ருந்தால் அல்­லது குறிப்­பிட்ட வரி தள்­ளு­ப­டியை கோர தவ­றி­இ­ருந்தால் சரி செய்து கொள்­ளலாம். தாம­த­மாக தாக்கல் செய்யும் போது இந்த வாய்ப்பு கிடை­யாது.

அப­ராதம்: குறிப்­பிட்ட கெடு­வுக்குள் மதிப்­பீட்டு ஆண்­டுக்­கான வரு­மான வரிக் கணக்கை தாக்கல் செய்­யா­விட்டால் இப்­போது அப­ரா­தமும் விதிக்க வழி செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்கு வட்­டியும் விதிக்­கப்­படும். குறித்த நேரத்தில் தாக்கல் செய்தால் அப­ராதம் பற்றி எல்லாம் கவ­லைப்­பட வேண்டாம். மேலும், தொழில்­முறை உத­வியை நாடும் போது வல்­லு­னர்­க­ளுக்கு உங்கள் கணக்கை கவ­னிக்க போதிய அவ­கா­சமும் கிடைக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...