இளம் தலை­மு­றையின் ஓய்­வூ­திய கவலை !!

பொரு­ளா­தார சவால்கள் தங்­க­ளது ஓய்­வு­கா­லத்தை பாதிக்கும் என, 1980 முதல் 1997 வரை­யான காலத்தில் பிறந்த புத்­தா­யி­ர­மாண்டு தலை­மு­றை­யினர் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக, எச்.எஸ்.பி.சி., நடத்­திய ஆய்வு தெரி­விக்­கி­றது.



ஓய்­வு ­கா­லத்தின் வருங்­காலம் எனும் இந்த ஆய்வில் புத்­தா­யி­ர­மாண்டு தலை­மு­றை­யினர் மத்­தியில் நிலவும் கவ­லைகள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன. அவை வரு­மாறு: 52 சத­வீதம் பேர், முந்­தைய தலை­முறை வளர்ச்­சியை விட, தங்கள் தலை­முறை பல­வீ­ன­மான பொரு­ளா­தார வளர்ச்­சியை கண்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். முந்­தைய தலை­முறை பொரு­ளா­தார முடி­வுகள் தங்­களை பாதிப்­ப­தாக, 60 சத­வீதம் பேர் தெரி­வித்­துள்­ளனர். நிறு­வ­னங்­களின் ஓய்­வூ­திய திட்­டங்கள் பலன் அளிக்­காது என, 46 சத­வீதம் பேர் அஞ்­சு­கின்­றனர்.

இந்த தலை­மு­றை­யினர் பொது­வாக, 27 வயதில் சேமிக்கத் துவங்­கு­கின்­றனர். 13 சத­வீதம் பேர் இன்னும் சேமிக்கத் துவங்­க­வில்லை என தெரி­வித்­துள்­ளனர். 68 சத­வீதம் பேர் தங்கள் செல­வு­களை குறைத்துக் கொண்டு எதிர்­கா­லத்­திற்­காக அதிகம் சேமிக்க விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர். செல­வு­களை குறைப்­பது கடினம் என்­றாலும், அவ­சியம் என, பெரும்­பா­லானோர் கருத்து தெரி­வித்­துள்­ளனர். இவர்­களில் பலர் நீண்ட கால பல­னுக்­காக, ‘ரிஸ்க்’ மிகுந்த முத­லீட்டு வாய்ப்­பு­களை நாட தயா­ராக உள்­ளனர். பெரும்­பா­லானோர் முறை­யான நிதி ஆலோ­ச­னையை நாட தயா­ராக உள்­ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...