15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைந்தவர்களில், சரியாக வேலை பார்க்காத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமை செயலர் ஓ.பி.மீனா, அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: பணியில் சேர்ந்த 15 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள்
அல்லது 50 வயது நிறைவு பெற்றவர்களை கண்டறிய வேண்டும். இந்த இரண்டில் எது முதலில் இருந்தாலும், அவர்களின் பணி திருப்தி அளிக்காத நிலையில் இருந்தாலும், ஒழுங்காக வேலை பார்க்காமல் இருந்தாலும், வேலை செய்ய முடியாத நிலையில் இருந்தாலும் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். இதனை அனைத்து துறை தலைவர்களும் 3 மாதத்தில் செய்து முடிக்க வேண்டும். அவர்களுக்கு 3மாத கால அவகாசம் வழங்கி பணி நீக்கம் செய்யலாம் அல்லது. மூன்று மாத சம்பளம், படிகள் ஆகியவற்றை வழங்கி உடனடியாக பணி நீக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது