பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல், ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் கருணாநிதி, அன்பரசன், சுரேஷ், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


. இதில், தமிழ்நாடு அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



ஆர்பாட்டத்தில் ஏராளமான பகுதி நேர ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...